Skip to main content

வாட்ஸப்பில் வரவிருக்கும் ஐந்து புது அம்சங்கள்

போலி செய்திகளை கட்டுப்படுத்தவும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வாட்ஸப்பில் ஐந்து அம்சங்கள் வரவிருக்கவுள்ளது. அனுப்பிய செய்திகளின் விவரங்களையும், அடிக்கடி அனுப்பிய செய்திகளின் டேக்(Tag) போன்ற அம்சங்களை கொண்டுள்ளதால், போலி செய்திகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக செயல்படும் வகையில் இவை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், வாட்ஸப்பானது வெறும் உடனடி செய்தியிடல்  தளத்திலிருந்து ஒரு முழுமையான தகவல் தொடர்பு அளவிற்கு வளர்ந்துள்ளது. ஸ்டிக்கர்கள், GIF கள் மற்றும் நேரடி இருப்பிட பகிர்வு போன்ற புதிய அம்சங்களால் ,வாட்ஸப்  பொது வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.மேலும் இது தொடர்ந்து புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. சில சிறிய வெறுமையான அம்சங்களால் (like pin chats )வாட்ஸப் ஒரு அற்புதமான பயன்பாடாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சமீப காலமாக  போலி செய்திகள் அதிகமாக பரவுவதால் இந்த பயன்பாடு மிக மோசமான பிரச்சினையை சந்தித்து வருகிறது. எனவே வரவிருக்கும் நாட்களில், போலி செய்திகளை கட்டுப்படுத்தவும் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் சில புதிய அம்சங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்பாடு சார்ந்த உலாவி (In-app Browser)



இன்ஸ்டாகிராம் போன்ற பிற பேஸ்புக்-சொந்தமான தளங்கள் அவற்றிற்கென சொந்தமான பயன்பாட்டு உலாவிகளைக்(Browser) கொண்டிருந்தாலும்,  வாட்ஸப்க்கு இதுவரை இந்த வசதி இல்லை.இருப்பினும், இந்த அம்சத்தை செயல் முறையில் கொண்டுவந்தாலும் , அது பயன்பாட்டு உலாவியில் உள்ள இணைப்புகளைத் திறக்காது, ஆனால் இணைப்பு  பாதுகாப்பானதா இல்லையா என்பதை பயனர்களுக்கு தெரிவிக்கும்.

இமேஜ் தேடல் வசதி(Search Image Feature)

வாட்ஸப் பயனர்களுக்கு தனித்துவமான அம்சமாக இது  இருக்க போகிறது, ஒரு பயனர் வாட்ஸப்பில் வேண்டப்படாத இமேஜ்யை பெறும்போது, அவர் அந்த இமேஜ் மேலுள்ள மூன்று டாட் மெனு பொத்தானை தட்டும் போது Search Image ஆப்ஷன் வரும். ”Search Image” தட்டுவதன் மூலம் இந்த இமேஜ் கூகுளுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு, இணையத்தில் இந்த இமேஜ்டன் ஒத்த போகும் அல்லது சமமான படங்களை வெளிப்படுத்தும். படத்தின் நம்பகத்தன்மையை அல்லது தோற்றத்தை உறுதிபடுத்த  இது ஒரு நபருக்கு உதவும்.தற்போது, இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளது.c

முன்னனுப்பும் தகவல் அம்சம் (Forwarding Info Feature)



இந்த புதிய செயல்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட செய்தியை எத்தனை முறை பகிர்ந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் பார்க்க முடியும். ஒரு செய்தியை பற்றிய தகவலை தனிநபரின்  அரட்டை சாளரத்தின் செய்தி தகவல் பிரிவில் கிடைக்கும். எனவே பயனர்கள் அந்த செய்தியை ஒன்று அல்லது பல பயனர்களுடன் பகிர்ந்து கொண்டார்களா இல்லையா என்பதை கண்காணிக்கலாம்.

அடிக்கடி முன்னனுப்பப்பட்ட அம்சம் (Frequently Forwarded Feature )

இந்த அடிக்கடி செய்தியை அனுப்பப்பட்ட அம்சம் முன்னனுப்புதல் தகவல் அம்சத்திற்கு சிறிது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் இது செய்தியின் பெறுநருக்கு மட்டுமே தெரியும். நீங்கள் ஒரு செய்தியைப் பெறும்போது அது அடிக்கடி அனுப்பப்படுகிறதா அல்லது இல்லையா என்பதைக் காணமுடியும். நான்கு முறைக்கு மேல் ஒரு செய்தியை அனுப்புவதினால் இது அடிக்கடி  அனுப்பப்பட்ட செய்தி என வாட்ஸப் கருதுகிறது.

சிறு இணைப்பு அம்சம்(Short Link Feature)


credits to digtal information world

வாட்ஸப்பின் WA.ME சேவை மூலம் ஒரு இணைப்பை உருவாக்கி வணிகங்களுக்கு உதவும் வகையில் வாட்ஸப் வணிக iOS பயனர்களுக்காக  இந்த அம்சம் உள்ளது.இதனால், பயனர்கள் WhatsApp வணிகத்துடன் எந்த தடையும் இல்லாமல் அரட்டை(chats) செய்ய இது பயன்படுத்தப்படும்.

Comments

Popular posts from this blog

NHM Writer

NHM Converter

Jolly Phonics Lessons