போலி செய்திகளை கட்டுப்படுத்தவும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் வாட்ஸப்பில் ஐந்து அம்சங்கள் வரவிருக்கவுள்ளது. அனுப்பிய செய்திகளின் விவரங்களையும், அடிக்கடி அனுப்பிய செய்திகளின் டேக்(Tag) போன்ற அம்சங்களை கொண்டுள்ளதால், போலி செய்திகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக செயல்படும் வகையில் இவை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், வாட்ஸப்பானது வெறும் உடனடி செய்தியிடல் தளத்திலிருந்து ஒரு முழுமையான தகவல் தொடர்பு அளவிற்கு வளர்ந்துள்ளது. ஸ்டிக்கர்கள், GIF கள் மற்றும் நேரடி இருப்பிட பகிர்வு போன்ற புதிய அம்சங்களால் ,வாட்ஸப் பொது வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.மேலும் இது தொடர்ந்து புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. சில சிறிய வெறுமையான அம்சங்களால் (like pin chats )வாட்ஸப் ஒரு அற்புதமான பயன்பாடாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சமீப காலமாக போலி செய்திகள் அதிகமாக பரவுவதால் இந்த பயன்பாடு மிக மோசமான பிரச்சினையை சந்தித்து வருகிறது. எனவே வரவிருக்கும் நாட்களில், போலி செய்திகளை கட்டுப்படுத்தவும் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் சில புதிய அம்சங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பயன்பாடு...